வால்பாறை: வால்பாறை கக்கன்காலனி மகாமுனீஸ்வரர், கருப்புசாமி, சப்தகன்னிநாகாத்தமாள் கோவிலின் 13ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் நாளை(15ம் தேதி) காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக பூஜையும், இரவு 10.00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும் 16ம் தேதி காலை 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்திபூவோடு எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.வரும் 17ம் தேதி காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.