திருச்செந்தூர்: திருச்செந்நூர் முருகன் கோயில் மாசி மாத திருவிழா இன்று காலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான மாசி தேரோட்டம் பிப்ரவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் துவங்கிய மாசி திருவிழா கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.