பதிவு செய்த நாள்
18
பிப்
2013
11:02
சேலம்: சேலம், அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், 27ம் ஆண்டு திருப்படி திருவிழா நடந்தது. திரு.வி.க. பாதை, மாரிமுத்து முதலி தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, குமரகிரி ரோடு ஆகிய மாட வீதிகள் வழியாக, தேவார திருச்சபையினர் ஊர்வலமாக, குமரகிரி தண்டாயுதபாடி கோவிலுக்கு வந்தனர். படி விழாக்குழு தலைவர் மாணிக்கம் வரவேற்றார். சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் விழாக்குழு தலைவர் ஜெ.மாணிக்கம் தலைமை வகித்தார். சித்தேஸ்வரா ஸ்பின்னிங் மில் ராஜேந்திரன் கொடியேற்றினார்.குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் அடிவாரத்தில் உள்ள படிகளுக்கு, முதலில் திருப்படி பூஜை நடந்தது. ஒவ்வொரு படியிலும் தேங்காய், வாழைப்பழம், பூக்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. அடுத்து, 60ம் படி பூஜையில் குமரகிரி கோவில் தக்கார் ஞானமணி, பன்னிருதிருமுறை வேதபாராயண மன்ற தலைவர் செங்குட்டுவன், அங்கமுத்து, அறங்காவலர் செந்தில்நாதன் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவை முன்னிட்டு, குமரகிரி தண்டாயுதபாணிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருந்தது.