சிவசைலநாதர் கோயிலில் புதிய கொடி மரம் அமைப்பதற்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2013 11:02
ஆழ்வார்குறிச்சி: சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் புதிய கொடிமரம் நிறுவதற்கான நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிவசைலத்தில் சிவசைல நாதர்,பரம கல்யாணி அம்பாள் கோயிலில் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம்தேதி நடந்த கும்பாபிஷேகத்திற்கு பிறகு திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது.சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் புதிய புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த புதிய கொடிமரம் நிறுவுவதற்கான நிகழ்ச்சிகள் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 6மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. இன்று (18ம்தேதி) 2ம் கால பூஜை துவங்கி 20ம் தேதி காலை வரை ஆறு கால பூஜைகள் நடக்கின்றன.பகல் 11மணியிலிருந்து 12மணிக்குள் புதிய கொடிமரம் நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து 21ம் தேதி முதல் 23ம்தேதி வரை மகா ருத்ர ஜெபம் நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி, தக்கார், சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி,அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.