பதிவு செய்த நாள்
19
பிப்
2013
10:02
வெள்ளேரிதாங்கல்: வெள்ளேரிதாங்கல் பெரியபாளையத்து அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை ஓட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடம்பத்தூர் ஒன்றியம், வெள்ளேரிதாங்கல் கிராமம், மேட்டுத் தெருவில், பெரியபாளையத்து அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாக சாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் கோபுரத்தின் மீது, புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழக தேசிய ஆன்மிக மக்கள் கேந்திரா மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.