பதிவு செய்த நாள்
19
பிப்
2013
10:02
பழநி: பழநி கோயிலில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பணியிடங்கள் காலியாகவுள்ளது. முதல்கட்டமாக 80 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அலுவல உதவியாளர் 62, ஓதுவார் 1, அர்ச்சகர் 2, சுயம்பாகம் 2, பரிசாரகம் 3, நாதஸ்வரம் 3, தவில் 2, ஒத்து 2, தாளம் 3. ஆகிய 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித்தகுதியாக 8 வகுப்பு, 10ம் வகுப்பு வரையும், மேலும் அந்தந்த துறைகளில் போதிய அனுபவமும், திறமையும் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் பிப். 8க்குள் விண்ணப்பங்களை தேவஸ்தான அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். என இணைக்கமிஷனர் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது மேற்கண்ட பணியிடங்களுக்காக சுமார் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை பிரிக்கும் பணிகள் நடக்கிறது. தனித்தனியாக பணியிடங்களுக்குரிய விண்ணப்பங்களை பிரித்து முடிப்பதற்கு 3 அல்லது 4 வாரங்கள் ஆகலாம். அதன் பின்னர் நேர்முகத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட உள்ளனர்.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில் காலியிடங்களுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளது. பணி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடக்கும். நேர்முகத்தேர்வு இம்மாதம் கடைசி அல்லது மார்ச்சில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அங்கீகாரத்திற்கு பின், பணி நியமனம் செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வு நியாயமான முறையில் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் யாரிடமும், சிபாரிசு, பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்," என்றார்