பதிவு செய்த நாள்
19
பிப்
2013
11:02
நாமக்கல்: மாணிக்கம்பாளையம், அண்ணன்மார் ஸ்வாமி கோவிலில், மார்ச், 10ம் தேதி, மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் அடுத்த கூத்தம்பூண்டி கிராமம், மாணிக்கம்பாளையத்தில் அண்ணன்மார் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், மகா சிவராத்திரி விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, மார்ச், 10ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு, அன்று காலை, 8 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவர புறப்படுதல், இரவு, 9 மணிக்கு கரகம்பாளித்து நந்தவன பிள்ளையார் கோவிலுக்கு செல்லுதல், இரவு, 10 மணிக்கு பொன்னர் சங்கர் நாடகம் நடக்கிறது. மார்ச், 11ம் தேதி காலை, 6 மணிக்கு பெரும் பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அதிகாலை, 3 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்வாமி படுகளத்துடன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.மார்ச், 12ம் தேதி காலை, 6 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு சத்தாபரணம், 13ம் தேதி காலை, 10 மணிக்கு மறு அபிஷேகமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற குடிபாட்டு மக்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.