பதிவு செய்த நாள்
19
பிப்
2013
11:02
வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி, ஆயிரத்து ஆறு பால் குட அபிஷேகம் நடந்தது.ஊர்வலத்தை, அமைச்சர் டாக்டர் விஜய் துவக்கி வைத்தார். மாவட்ட அ.தி.மு.க., இணை செயலாளர் முனியம்மாள், அமைச்சர் முகமது ஜான், மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் தர்மலிங்கம், வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் அனுஷ்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் தாஸ், மண்டலத் தலைவர்கள் குமார், சுந்தரம், கவுன்சிலர்கள் சிவாஜி, துரையரசன், பாரத்குமார், உஷா நந்தினி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் வள்ளலார் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர், 65 கிலோ எடையுள்ள கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஏழைகளுக்கு வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட இணை செயலாளர் முனியம்மாள் செய்தார்.