Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூண்டா மணிவிளக்கு... விளக்கம் என்ன? இதுதான் கீதை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒன்றே குலமென்று பாடுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2013
04:02

*அன்பால் மனதை அலங்கரித்தால், அகிலம் முழுவதையும் நம்மால் அரவணைக்க முடியும்.
*ஒருவரை மன்னிப்பதில் இருக்கும் இன்பம் பழிவாங்கும் உணர்வில் இருப்பதில்லை.
*பாவத்திற்கெல்லாம் தாய் வறுமையே. வறியவனிடம் பாவ புண்ணியத்தைப் பற்றிய பேச்சு எடுபடாது.
*கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்று பழிக்குப் பழி வாங்கும் குணம் நல்லதல்ல.
*சோதனை நேரும்போதுதான் மனிதன் பொறுமை, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*கொல்லாமை மட்டுமே அகிம்சை என்று நினைக்கிறோம். எல்லா நல்ல செயல்களும் அகிம்சையில் தான் அடங்கும்.
*செல்வம் அதிகம் சேரும்போது மனிதன் பண்பு, தரம் குறைந்தவனாகி விடுகிறான்.
*பணம் சக்கரம்போல சுழன்று வரும் இயல்பு கொண்டது. எனவே, அதனை தர்மவழியில் செலவிடுவதே அறிவுடைமை. பதவி, அதிகாரம், அந்தஸ்து என்று வாழ்வின் எந்த உயர்ந்த நிலைக்கும் இக்கருத்து பொருந்தும். 
*ஒருவன் வாழும் வாழ்க்கை அவனுக்கும், மற்றவர் களுக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்.
*கட்டாயத்தின் பேரில் செய்யும் உதவியைத் தொண்டு எனக் கூற முடியாது. மனம் உவந்து செய்வதே தொண்டு.
*பொருள் இல்லாதவர்களும் தொண்டாற்ற முன் வரலாம். அவரவர் தகுதிக்கு உட்பட்ட நற்செயல்களை அவர்கள் செய்யலாம்.
*மனிதகுலம் முழுவதும் ஒன்றே. இதைத்தான் உலகமே ஒரு சிறிய கிராமம் என்றார் ஆங்கிலக்கவிஞர் கோல்ட்ஸ்மித். இந்த உணர்வை நாம் பெற்று விட்டால் உலகம் நன்மை பெறும்.
*பிறருக்கு நன்மை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவற விட்டு விடாதீர்கள்.
*ஏழைக்குக் கடன் கொடுத்தவன் கடவுளுக்கே கடன் கொடுத்தவன் ஆகிறான். அவனுக்கு ஆண்டவன் அவற்றைப் பல மடங்கு திருப்பிக் கொடுப்பான் என பைபிள் வலியுறுத்துகிறது.
*அருளாளர்களை மதிப்பது ஆண்டவனையே மதிப்பதாகும். அவர்களை இழிவுபடுத்துவதும் அவரையே இழிவு படுத்துவதற்குச் சமம்.
*மற்ற மனிதர்களிடமும், உயிர்களிடமும் கருணை காட்டுபவன் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்.
*வாழ்வில் மனிதநேயத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெற்று மகிழ்வார்கள்.
*நாம் ஒருவருக்கொருவர் துணையாக வாழ வேண்டுமே தவிர, யாருக்கும் தொந்தரவு தருபவர்களாக இருக்கக் கூடாது.
*பண்புகளில் மணிமுடியாகத் திகழ்வது மனிதநேயம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டால் மனதில்  னிதநேயம் மலரத் தொடங்கி விட்டது என்று பொருள்.
*இளமையில் ஊன்றப்படும் விதைகளே முதுமையில் அறுவடை செய்யப் படுகின்றன. அதனால், குழந்தைப் பருவத்திலேயே இரக்கம், கருணை, மன்னிப்பு, விட்டுக் கொடுத்தல் ஆகிய பண்புகளை உருவாக்கி விட வேண்டும்.
*மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிந்தனை ஆற்றல் உண்டு. அதைச் சரியான வழியில் செலுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் பணி. கமலாத்தமானந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar