பதிவு செய்த நாள்
27
பிப்
2013
10:02
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், 15 ஆண்டுகளுக்கு பின், இன்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், 15 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டு கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடைபெற்றன. அப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக விழா, பிப்., 20 ல் துவங்கின. தினமும் பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8.45 முதல் 9.45 மணிக்குள் பகவதி அம்மன் மற்றும் பரிவார கோயில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகத்தை தந்திரி மாத்தூர் மடம் சங்கரநாராயணரரு முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள், மடாதிபதிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.