திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் குபேரலிங்கேஸ்வரர் கோவிலில், லலிதா சகஸ்கர நாம பூஜை நடந்தது.திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டி, குபேரலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாசிமக பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் கனரா வங்கி திருக்கழுக்குன்றம் கிளை சார்பில், லலிதா சகஸ்கரநாம பூஜை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, கோவிலில் அமைந்துள்ள குபேரிஸ்வரி சன்னிதியில், லலிதாம்பிகை அம்பாள் திருவுருவப் படம் வைத்து, மலர் அலாங்காரம் செ#யப்பட்டது.