பதிவு செய்த நாள்
28
பிப்
2013
10:02
பழநி: பழநி, லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. கும்பாபிஷேக பணிக்காக, தரைத்தளங்கள் அமைத்தல்,கோபுரங்களில் வர்ணம் பூசுதல் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்தது. கோயில் மூலவர் கோபுரத்தின் கீழ்தளத்தில் தோண்டும் போது, 6 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராய மூர்த்தி, மதுரை அரசு அருங்காட்சியக் காப்பாட்சியர் பெரியசாமி, பேராசிரியர் கன்னிமுத்து தலைமையிலான குழு ஆய்வு செய்தது. கோயிலில் உள்ள 6 கல்வெட்டுகளும் 13ம் நூற்றாண்டில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த, சடையவர்மன் சுந்தபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறுகையில்,""ஒரு கல்வெட்டில், தற்போது ஆயிர வைசியர் என அழைக்கப்படுவர்கள், அக்காலத்தில் "பதினெட்டு நாட்டு ஆயிரவர் என்று அழைக்கப்பட்டதாக கல்வெடு கூறுகிறது. மற்றொன்றில் கோயில் நம்பிமார்களுக்கும், பழநி ஊர் மக்களின் அன்னதானத்துக்கும் விடப்பட்ட நிலங்களுக்கு ஒட்டச்சு, ஆராட்சி, அந்தராஷம் ஆகிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது, என்றார்.