பதிவு செய்த நாள்
02
மார்
2013
10:03
சேலம் கோவில் திருவிழாக்களுக்கு பெயர் போன சேலத்தில், தற்போது மாசித் திருவிழா நடந்து வருகிறது. அம்மாபேட்டையில் உள்ள காளியம்மன் கோவிலில், நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள், 1,008 பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பட்டைக்கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பி, அம்மாபேட்டை மெயின்ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சாமி ஊர்வலம் நிகழ்ச்சியும் நடந்தது. தாதுபாய்குட்டையில் உள்ள வேம்பரசர் விநாயகர் கோவிலில், மாசித்திருவிழா, கடந்த செவ்வாய்க்கிழமை (ஃபிப்., 19) பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு பூஜை, கம்பம் நடுதல் என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று, உலக நன்மைக்காக, 108 கலச பூஜை வைத்து யாகம் நடத்தப்பட்டது. பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும், 5ம் தேதி மாலை, 6 மணிக்கு, பால்குடம் எடுத்து ஊர்வலம் வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.