பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
மேட்டூர்: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மார்ச், 13ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு லட்சர்ச்சனை, 1,008 சங்காபிஷேகம், சிறப்பு பூஜை டக்கிறது. சேலம் மாவட்டம், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜை வரும், 13ம் தேதி நிறைவடைகிறது. மண்டல பூஜை நிறைவடைவதை முன்னிட்டு, வரும், 11ம் தேதி இரவு, 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, லட்சர்ச்சனை நடக்கிறது. மார்ச், 12ம் இரவு, 7 மணிக்கு லட்சர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மார்ச், 13ம் தேதி காலை, 9 மணிக்கு மகாகணபதி பூஜை, 1,008 சங்காபிஷேகம், மதியம், 1 மணிக்கு தீபாராதனை, சிறப்பு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, "போதும் என்ற மனம் என்ற தலைப்பில், இறையன்பு சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார். ஏற்பாடுகளை இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்கின்றனர்.