நெட்டப்பாக்கம்:செம்படப்பேட்டை அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை 7.00 மணிக்கு கரகம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், 10 மணிக்கு அக்னி கரகம் எடுத்து தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 7 மணிக்கு மகா சிவராத்திரி விழா நடந்தது.எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், பெரியசாமி எம்.எல்.ஏ., பாட்கோ சேர்மன் பிரசாந்குமார், பேராசிரியர் ராமதாஸ், பருவத ராஜ குல சங்கத் தலைவர் ராஜேந் திரன், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.