பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
போந்தவாக்கம்:சிவராத்திரியை ஒட்டி, திரவுபதி அம்மனுக்கு, 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. சிவராத்திரி பண்டிகையை ஒட்டி, ஊத்துக்கோட்டை அடுத்துள்ள போந்தவாக்கத்தில், திரவுபதி அம்மனுக்கு நேற்று, 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது.காலை, 9:00 மணிக்கு புறப்பட்ட பால்குடம் ஊர்வலத்தில், சிறுவர்கள், பெண்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகளின் வழியாக மேள தாளத்துடன் வந்த ஊர்வலம், 10:00 மணிக்கு கோயில் வளாகத்தை அடைந்தது. 108 பால் குடங்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.