கொதிக்கும் நெய்யில் அப்பம் கையால் எடுத்த மூதாட்டி: சிவராத்திரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2013 10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டியில், கொதிக்கிற நெய்யில் கையை விட்டு மூதாட்டி அப்பம் சுட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரியையொட்டி, பல ஆண்டுகளாக கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு, வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு, 90 நாட்கள் விரதமிருந்த ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த முத்தம்மாள், 78, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து, சட்டியில் நெய் ஊற்றி, கரண்டி பயன்படுத்தாமல் கையாலேயே அப்பம் சுட்டார். இப்படி சுட்ட அப்பங்களை, 25 ஓலை பெட்டிகளில் சேகரித்தார். அம்மனுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.