Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் கோயில் குண்டம் ... 108 கலச அபிஷேகம் !
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் கோயிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா : வரும் 17ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2013
10:03

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பேரூர் கொங்குநாட்டு வைப்புத்தலங்களில் பிரசித்த பெற்ற சிவன் தலமாகும். இங்கு ஆண்டுதோறும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கிறது. விழா, வரும் 17ம் தேதி காலை 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 8.00 மணிக்கு மலர்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்களுக்கு, காலை 9.00 மணிக்கு வேள்விபூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. 18ம் தேதி இரவு சந்திரபிரபை, சூர்யபிரபை திருவீதி உலா, 19ம் தேதி இரவு பூதவாகனம், சிம்மவாகனம், 20ம் தேதி இரவு மலர்ரதம், காமதேனுவாகனம், 21ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபவாகன காட்சி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் காட்சியும், 22ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை சேவையும் நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 3.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 24ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா நடத்தப்பட்டு, வரும் 25ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழா நடக்கிறது. வரும் 26ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, மகாதீபாராதனை, திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 26ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar