திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2013 10:03
ஆனைமலை:ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆனைமலையில் புகழ் பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் விழா வரும் 28 ம் தேதி நடக்கிறது. இக் கோவிலில் தர்மராஜாரும்,திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. குண்டம் விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அன்றாடம் அம்மனுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும் 26 ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும் நடைபெற உள்ளது. 27ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது. 28 ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடை பெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.