நோனாங்குப்பம் கோவிலில் மன்மதன் - ரதி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 10:03
புதுச்சேரி: நோனாங்குப்பம் சிவசக்தி அம்மன் கோவி லில் மன்மதன்-ரதி திருக் கல்யாணம் நேற்று நடந்தது. நோனாங்குப்பம் சிவசக்தி அம்மன் கோவிலில் 43வது மற்றும் மன்மதன்-ரதி (காமன் கோவில்) 60ம் ஆண்டு மணி விழா கடந்த 13ம் தேதி சிவசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து இரவு 7 மணிக்கு காமன் கால் நடு விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று திருக்கல்யாண விழா நடந்தது. விழாவை முன்னிடு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு மன்மதன்-ரதி திருக் கல்யாணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழு, புதுச்சேரி விப்ஜியார் இளைஞர் நல நற்பணி இயக்கம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.