புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி கோவில் தேர் திருவிழா வரும் 25 ம்தேதி நடக்கிறது. முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா நேற்று முன் தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 7.30 மணிக்கு யாக சாலை பூஜைகள் விமர்சையாக நடந்தது. இரவு 7 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 25 ம்தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 26 ம்தேதி காவட உற்சவம், 28 ம்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.