இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 28 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இவ்வாண்டுக்கான திருவிழா மார்ச் 28ல் துவங்குகிறது. காலை 10.40 மணிக்கு நவசக்தி ஹோமம் , மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை , இரவு 10.35 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன் கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 29 காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனம் , காமதேனு வாகனம் , அன்ன வாகனம் . பூத வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஏப்.4 ல் காலை 6 மணிக்கு பொங்கல் விழாவும் , மறு நாள் இரவு 7 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஏப். 7 ல் இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா முடிகிறது.