ஆழ்வார்களிலேயே பெரிய என்னும் அடைமொழியோடு குறிப்பிடப்படுபவர் பெரியாழ்வார். ஆனி, வளர்பிறை ஏகாதசி சுவாதிநாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடியதால், ஆழ்வார்களில் பெரியவர் என்ற பொருளில் பெரியாழ்வார் பெயர் ஏற்பட்டது. விஷ்ணுசித்தர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கருடனின் அம்சமாகத் தோன்றியவர். தன்னை யசோதையாகப் பாவனை செய்து, கண்ணனைப் போற்றிப் பாடிய இவரது பாடல்கள் தாயின் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் வளர்ப்புத்தந்தை என்ற பெருமை மிக்கவர். வளர்ப்புமகளான ஆண்டாளை ரங்கநாதர் மணந்ததால் பெருமாளுக்கு மாமனாராகும் பாக்கியம் பெற்றவர்.