சிவபெருமான் 64 திருவிளை யாடல்களை நிகழ்த்திய அற்புத தலம் மதுரை. இங்கு அம்பிகை மீனாட்சி யாகவும், சுவாமி சொக்கநாதராகவும் இருந்து அருளாட்சி நடத்துகின்றனர். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக பார்வதி தடாதகைப் பிராட்டியாக அவதரித்தாள். அவளே அன்னை மீனாட்சியாக மதுரையில் அருள்பாலிக்கிறாள். மீனாட்சிக்கும், சிவபெருமானான சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. சிம்மாசனத்தில் அமரும் முன் அரசனும்அரசியும் சிவபூஜை செய்யவேண்டும் என்பது பாண்டியநாட்டின் மரபு. சிவபெருமானான சுந்தரேசப் பெருமானும், உமையவளான மீனாட்சியும் லிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்தனர். இத்தலம் மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயில் என்னும் பெயரில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டோருக்கு தீவினை நீங்கி இப்பிறவியிலேயே நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.