திருத்தணி: திருத்தணி காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். அக்கோவிலில், தீ மிதி திருவிழா நேற்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வரும், 27ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 29ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், புஷ்ப பல்லாக்கு உற்சவம் நடைபெற உள்ளது. ஏப்ரல், 1ம் தேதி, அர்ஜுனன் தபசு, 7ம் தேதி துரியோதனன் சம்ஹாரம், அன்று மாலை முக்கிய உற்சவமான தீமிதி திருவிழா நடைபெற இருக்கிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், காந்தி நகர் மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.