Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆறாம் பத்து! எட்டாம் பத்து!
முதல் பக்கம் » பதிற்றுப்பத்து
ஏழாம் பத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
02:03

பதிற்றுப்பத்து - 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை

பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை,  5
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க என,  10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே-ஒளி வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,  15
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி
முழவில் போக்கிய வெளி கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

பதிற்றுப்பத்து - 62. வென்றிச் சிறப்பு

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வரைபோல் இஞ்சி

இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பல் தோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,
வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல்  5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,
துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே!
புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி,  10
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி,  15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.

பதிற்றுப்பத்து - 63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அருவி ஆம்பல்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,
நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே,
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே;  5
நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி,  10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒளி வாட்
செரு மிகு தானை வெல் போரோயே;
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,
நீ கண்டனையேம் என்றனர்: நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால்,  15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி  20
வாழி, ஆத! வாழிய, பலவே!

பதிற்றுப்பத்து - 64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உரைசால் வேள்வி

வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப்
பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம!
அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி,
அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு,  5
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து,
களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின்,
புறஞ் சிறை வயிரியர்க் காணின், வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவி,
அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம் என,  10
ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி,
காண்கு வந்திசின்-கழல் தொடி அண்ணல்!  15
மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல்! நின் பாசறையானே.  20

பதிற்றுப்பத்து - 65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்

துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாள் மகிழ் இருக்கை

எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின்
பரியுடை நல் மா விரி உளை சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ!  5
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள்,
காமர் கடவுளும் ஆளும் கற்பின்,
சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ!  10
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்
நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே-
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு,  15
சேறு செய் மாரியின், அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே.

பதிற்றுப்பத்து - 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புதல் சூழ் பறவை

வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி,  5
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின்,  10
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப,  15
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.  20

பதிற்றுப்பத்து - 67. கொடைச் சிறப்பு

துறை : பாணாற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் போழ்க் கண்ணி

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்,
கடன் அறி மரபின் கை வல் பாண!
தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை-
கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க,  5
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,
அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்
குழூஉச் சிறை எருவை குருதி ஆர,
தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு  10
உரு இல் பேய் மகள் கவலை கவற்ற,
நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று;
நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு  15
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து;
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்-
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்,  20
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்
கல் உயர் நேரிப் பொருநன்,
செல்வக் கோமான் பாடினை செலினே.

பதிற்றுப்பத்து - 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏம வாழ்க்கை

கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்,
கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர,
வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது  5
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது,
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு,
கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்,  10
அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து,
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்-
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ,  15
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச்
செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல்,
அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே?  20

பதிற்றுப்பத்து - 69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : மண் கெழு ஞாலம்

மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி,
வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க,
கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற,
எறிந்து சிதைந்த வாள்,  5
இலை தெரிந்த வேல்,
பாய்ந்து ஆய்ந்த மா,
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படுபிணம் பிறங்க நூறி, பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!-  10
நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாது
ஆண்டோ ர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்-
நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய,
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப,
விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர,  15
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,
இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே.

பதிற்றுப்பத்து - 70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : பறைக் குரல் அருவி

களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து,  5
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு,
தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி,
உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து,
கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த  10
வலம் படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற்  15
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை;
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,  20
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்  25
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!

 
மேலும் பதிற்றுப்பத்து »
temple news
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் பதிற்றுப் பத்து எனப் பெயர் ... மேலும்
 

இரண்டாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 11. வெற்றிச் செல்வச் சிறப்பு துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : ... மேலும்
 

மூன்றாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல் துறை : செந்துறைப் பாடாண் ... மேலும்
 

நான்காம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் துறை : செந்துறைப் ... மேலும்
 

ஐந்தாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar