Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரண்டாம் பத்து!
முதல் பக்கம் » பதிற்றுப்பத்து
பதிற்றுப் பத்து நூல் அறிமுகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 மார்
2013
02:03

பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் பதிற்றுப் பத்து எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.

பதிற்றுப்பத்து - கடவுள் வாழ்த்து

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!

பதிற்றுப்பத்து முதல் பத்து கிடைக்கவில்லை.

 
மேலும் பதிற்றுப்பத்து »

இரண்டாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 11. வெற்றிச் செல்வச் சிறப்பு துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : ... மேலும்
 

மூன்றாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல் துறை : செந்துறைப் பாடாண் ... மேலும்
 

நான்காம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் துறை : செந்துறைப் ... மேலும்
 

ஐந்தாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ... மேலும்
 

ஆறாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல் துறை : ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar