தானம் என்ற சொல் ஆன்மிகத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒரு பெண்ணை ஒரு ஆடவனுக்கு திருமணம் செய்து வைப்பதைக் கூட கன்னிகாதானம் என்று தான் சொல்கிறோம். கண்ணப்பர் இறைவனுக்கே கண்தானம் செய்தார் என்று பெரிய புராணத்தில் படிக்கிறோம். மற்றவர்களுக்கு நன்மை தருகிற தானம் எதையும் ஆன்மிகம் ஏற்றுக் கொள்கிறது.