ஈச்சனாரி திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2025 12:10
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ஆண்டுகந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா துவங்கியது..இதில் முதல் நிகழ்வாக 22 - 10 - 2025 புதன்கிழமை அன்று காலை கோவில் வளாகத்தில் கொகொடியேற்ற நிகழ்ச்சி. நடைபெற்றது.தொடர்ந்து கணபதி ஹோமம் ஷஷ்டி விரத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த 24ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இன்று 27ம் தேதி காலை 7 மணிக்கு சத்ரு சம்ஹார வேள்வி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 28ம் தேதி செவ்வாய்கிழமையன்று வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மூலவர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும் நிறைவாக 29.10-2025 அன்று மஞ்சள் நீராட்டு, மறுபூஜை நடைபறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தொலிக்க பட்டுள்ளது.