பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.இதையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் ”வாமி வீதியுலாவும், 21ம் தேதி கோபுர தரிசன நிகழ்ச்சியும், 23ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று (25ம்தேதி) காலை 10.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.அலங்கரிக்கப்பட்ட மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தேரில் வைத்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 12 மணிக்கு மெய்கண்டார் கோவில் எதிரில் நிறுத்தப்பட்டது. பின், மீண்டும் 5.30 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு மெய்கண்டார் கோவிலில் அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.கோவில் தக்கார் ஜெயக்குமார், ஆய்வாளர் முருகேசன், செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சரவணக்குமார், பேரூராட்சி தலைவர் வெற்றிவேல், செயல் அலுவலர் விஜயன், நகர செயலாளர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.28ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா முடிகிறது. ஏற்பாடுகளை உற்சவதாரர்கள், குருக்கள் ரவி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.