வன்னிக்கோனேந்தல் அய்யனார் சாஸ்தா கோயிலில் இன்று பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2013 11:03
தேவர்குளம்:வன்னிக்கோனேந்தல் நினைத்ததை முடித்த அய்யனார் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழா நேற்று துவங்கியது.நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் நினைத்ததை முடித்த அய்யனார் சாஸ்தா மற்றும் ஒண்டி இருளப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா நேற்று குடியழைப்புடன் துவங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. ராமேஸ்வரம், குற்றாலம், திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார, தீபாராதனை நடந்தது. இன்று (26ம் தேதி) காலை பனவடலிசத்திரத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம் அபிஷேகம், அலங்காரம், மதியக் கொடை நடக்கிறது. இரவில் சிறப்பு அலங்காரம், பூஜை, இன்னிசை கச்சேரி, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது.நாளை (27ம் தேதி) பொங்கல் வழிபாடு நடக்கிறது.ஏற்பாடுகளை வன்னிக்கோனேந்தல் நினைத்ததை முடித்த அய்யனார் சாஸ்தா கோயில் பங்குனி உத்திரவிழாக் குழுவினர் செய்துள்ளனர்.