பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
அச்சிறுப்பாக்கம்: நடுபழநி சித்தி விநாயகர், மரகத தண்டாயுதபாணிசவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா, நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அச்சிறுப்பாக்கம் அடுத்த, பெருக்கரணை கிராமத்தில், நடுபழநி என, அழைக்கப்படும் கனகமலை அடிவாரத்தில், சித்தி விநாயகர், மரகத தண்டாயுதபாணிசவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி படி விழா மற்றும் பங்குனி உத்திர விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.வழக்கம்போல், இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. 9:00 மணிக்கு தேரோட்டம் மற்றும் படி விழா நடந்தது.விழாவை ஸ்ரீதத்த பீடாதிபதி கணபதி சச்சிதானந்தசவாமிகள், ஸ்ரீதத்த விஜயானந்த தீர்த்தசவாமிகள், ஆகியோர் துவக்கி வைத்தனர். இரவு 11:00 மணிக்கு சித்தி விநாயகர் கிரிவலம் நடந்தது.பங்குனி உத்திரத் திருவிழாவான நேற்று காலை 8:30 மணிக்கு, காவடி பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு, பம்பை சிலம்பாட்டம், மாலை பக்தி சொற்பொழிவு, பட்டிமண்டபம், இரவு இன்னிசை நிகழ்ச்சி, திருமுருகர் திருக்கல்யாணம், ஆகியவை நடந்தன. பெரும்பாலான பக்தர்கள், நேர்த்திக்கடனாக காவடி எடுத்து வந்தனர்.