செஞ்சி: நடந்தது.செஞ்சி தாலூக மேல்ஒலக்கூர் பசுமலை முருகன் கோவிலில் 25 ம்தேதி மாலை பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து மகா தீபாராதானை நடந்தது.மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பசுமலையை சுற்றி கிரிவலமாக தேரோட் டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.இரவு வாணவேடிக்கை, நாடகம், இன்னிசை கச்சேரி ஆகியன நடந்தது. தொடர் அன்னதானம் நடந்தது.செஞ்சியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். விழாக்குழுவினர் அண்ணாதுரை, சிவக்குமார், ராஜசேகரன், ராமமூர்த்தி, அருள், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.