விநாயகர், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2026 10:10
கிணத்துக்கடவு: செட்டியக்காபாளையம், விநாயகர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டியக்காபாளையம் விநாயகர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று, சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, திருவாராதனம், மண்டல ஆராதனம் நான்காம் கால ஹோமம், தீபாராதனை, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு, விமான கலச அபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிகப்பட்டதது. பின், சுவாமிக்கு அர்ச்சனை, சாற்றுமுறை, கோஷ்டி பிரசாதம் மற்றும் அன்னதானம் நடந்தது.
* கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் உள்ள சீதாராமச்சந்திர சீதேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் (24 தேதி) துவங்கியது. இதில், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல், தீர்த்தம் எடுத்தல், முளைப்பாரி கொண்டு வருதல், முதல் கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, (25ம் தேதி) இரண்டாம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடு, கோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், திருக்கல்யாணம் பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.