பதிவு செய்த நாள்
28
மார்
2013
11:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, தகடு உருக்குகள், 1.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.பக்தர்கள், தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தகட்டால் உருவாக்கப்பட்ட மனித உருவம், கை, கால், மார்பு மற்றும் கண் போன்றவற்றை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.தகடு உருவங்கள், நேற்று, ஏலம் விடப்பட்டன. மொத்தம், 305 கிலோ எடை கொண்ட தகடு உருக்குகள், 1.5லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.