தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பர். அதே சமயத்தில், பெற்ற தந்தையை புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் பிரகலாதன். விபீஷணன் தன்னை வளர்த்த அண்ணன் ராவணனின் தவறைத் தட்டிகேட்டான். பரதன் தன் தாய் கைகேயியின் செயல்பாட்டைக் கண்டித்து பேசினான். கடவுளுக்கும் தர்மத்திற்கும் விரோதமாக மூத்தவர்கள் நடந்து கொள்வதால் இளையவர்களுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய நிலையை பெரியவர்கள் இளைய தலைமுறையினருக்கு உருவாக்கக்கூடாது என்பதை இவர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.