அம்மையப்பரான சிவபார்வதி ஆகியோரில் அன்னை பார்வதிக்கு புகழ்பெற்ற அந்தாதி நூலாக அபிராமி அந்தாதி உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் இந்நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதுபோல, அப்பனான ஈசனுக்கும் அந்தாதி நூல்கள் உள்ளன. பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் சிவபெருமான் அந்தாதி இருக்கிறது. இது கபிலதேவநாயனார் எழுதியதாகும். பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத்திருவந்தாதியும் சிவனைப் பற்றியதே. அந்தாதிப்பாடல்களில் ஒருபாடலின் இறுதியடி அடுத்தபாடலில் முதலடியாக அமையும். நூறு பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.