பதிவு செய்த நாள்
16
பிப்
2011
05:02
பெயர்: பாம்பன் சுவாமிகள்.
பிறந்த ஊர் : ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன்.
பெற்றோர் : சாத்தப்ப பிள்ளை - செங்கமல அம்மையார்.
பிறந்தது : 1850-ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை.
இயற்பெயர் : அப்பாவு.
சிறப்பெயர் : ஸ்ரீமத் குமரகுருதாசர்.
சீடர்கள் : திரு.வி.க., வெ.அப்பாவு பிள்ளை, சச்சிதானந்தம்
பிள்ளை, முத்துகருப்ப பிள்ளை, மு. சின்னசாமி பிள்ளை, சா. முத்தையா பிள்ளை, பாலசுந்தர சுவாமிகள் போன்ற பலர்.
இளம் வயதில் கற்றவை: சிலம்பம், மற்போர், நீந்துதல், சீத்திரம் தீட்டல், மலர் தொடுத்தல் போன்றவை.
ஆசிரியர்கள்: முனியாண்டியா பிள்ளை, சேதுமாதாவ ஐயர்.
திருமணம் நடந்தது: 1878 வைகாசி மாதம்.
மனைவி: காளிமுத்தம்மையார்.
பிள்ளைகள்: முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாசபிள்ளை.
துறவு ஏற்றது: 1895.
தரிசித்த தலங்கள்: சென்னை, ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, நெல்லை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை,
திருவானைக் கோவில், திருவண்ணா மலை, திருக்காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, ஹரித்வார், அயோத்தி, காசி என்று எண்ணற்ற தலங்கள்.
பாடிய பாடல்களின் எண்ணிக்கை:6666
எமுதிய நுல்கள்: பரிபூரணானந்த போதம், சிவசூரிய பிரகாசம், சுத்தாத்வைத நிர்ணயம், தகராலய ரகசியம், சதானந்த சாகரம்,
சிவஞான தீபம், காசியாத்திரை, சேந்தன் செந்தமிழ், அமைதி ஐம்பது, திருப்பா, ஸ்ரீமத் குமாரசுவாமியம், குமாரஸ்தவம்,
திவோதய ஷடக்ஷரோப தேசமெனும் சிவஞான தேசிகம்.... என்று பட்டியல் நீளூம்.
சமாதி ஆனது: 30.5.1929 காலை 7.15 மணிக்கு.
சமாதி இடம்: திருவான்மியூருக்கு வடக்கே மயூரபுரம்.
குரு பூஜை: வைகாசி அமரபட்ச சஷ்டி.
மயூர வாகன சேவை: மார்கழி சுக்லபட்ச பிரதமை.
சுவாமிகளின் ஆலயங்கள் இருக்குமிடங்கள்: தவம் இருந்த பிரப்பன்வலசை, சிதம்பரம், திருப்பரங்குன்றம், சென்னை, நம்புல்லையர் தெரு, கன்யாகுமரி மற்றும் மலேஷியா போன்ற மேலைநாடுகள்.