இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா இந்த ஆண்டு நேற்று முன் தினம் ( மார்ச் 28 ) இரவு 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், ஊராட்சி தலைவர் வசந்தா, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அய்யாச்சாமி , லெட்சுமி, தடியமங்கலம் ஊராட்சி தலைவர் சேகர், தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர். தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பொங்கல் விழா ஏப்.4 ல் காலை 6 மணிக்கும், ஏப்.5 இரவு 7 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஏப்.,6 அன்று காலை 7.35 மணிக்கு பால்குடமும் , மாலை 6 மணிக்கு ஊஞ்சலும் , இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. ஏப்.7 இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியுடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா முடிகிறது. விழா காலங்களில் விசேஷ மேளக்கச்சசேரி , கலை நிகழ்ச்சி நடைபெறும்.