இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஒரே வாரத்தில் உண்டியலில் ரூ. 9 லட்சத்து 64 ஆயிரத்து 800 வசூல் ஆனது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழா துவங்குவதற்கு முன் கடைசியாக மார்ச் 24ல் உண்டியல்கள் எண்ணப்பட்டது. திருவிழா துவங்கி நான்கு நாட்கள் ஆன நிலையில் ஏப்.1 ல் அறநிலையத்துறை பரமக்குடி உதவி ஆணையர் ரோஜாலி சுமதா , இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் தனபாலன் முன்னிலையில் , பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியாரால் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில், ரொக்கம் ரூபாய் 9 லட்சத்து 64 ஆயிரத்து 800 ம் , தங்கம் 72 கிராம் , வெள்ளி 105 கிராம் வசூலானது.