திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், 26வது ஆண்டு பிரதிஷ்டா தின அபிஷேக உற்சவம், ஏப்., 5ல் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு சாரதாம்பாளுக்கு மஹா அபிஷேகம் செய்விக்கப்பட்டு, மதியம் 12.00 மணிக்கு மஹா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெறும்.ஏப்., 16ல் நடக்கும் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் 61வது வர்த்தந்தி விழாவில், காலை 7.00 மணிக்கு நவக்கிரக ஆயுஷ்ய ஹோமாதி; காலை 9.00 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மே 5ல் ஸ்ரீசங்கர ஜெயந்தி உற்சவ விழா நடைபெற உள்ளது. அன்று காலை 8.00 மணிக்கு உபநிஷத் பாராயணம், வேதபாராயணம்; காலை 10.00 மணிக்கு மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.