*சாஸ்தா எனப்படும் ஐயப்பன் அவதரித்த திருநாள் பங்குனி உத்திரம். *கைலாயத்தில் தேவர்களும், முனிவர்களும் புடைசூழ சிவபார்வதி திருமணம் புரிந்த நாள். *சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகன், தெய்வானையை மணந்த நாள். *நெற்றிக்கண்ணால் எரித்த மன்மதனை, ரதிக்காக சிவன் மீண்டும் உயிர் பெறச் செய்த நாள். *சிவனுக்கு குருவாக இருந்து ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை, முருகன் உபதேசித்த நாள்.