ஆறுபடை வீடுகளை வரிசைப்படுத்தும் போது ஐந்தாம் படைவீடாக திருத்தணியைக் குறிப்பிடுவர். இதைக் குன்றுதோறாடல் என்பதுண்டு. இதற்கு குன்றுதோறும் குடியிருப்பவன் என்று பொருள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்ற சொல்வழக்கு இதை உறுதிப்படுத்துகிறது. ஆறுபடை வீடு மட்டுமில்லாமல், எல்லா மலை முருகன் கோயில்களுமே குன்றுதோறாடலில் அடங்கும்.