Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சியின் தர்பார்! இது சாப்பாட்டு விரதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டவிடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
03:04

*சிவபெருமானின் அவதாரமே சுப்பிரமணியர். ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களே பல பெயர்களில் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன.
*கந்தனும் கண்ணனும் ஒருவரே. இதனை கிருஷ்ணர் பகவத்கீதையில், சேனைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்று குறிப்பிடுகிறார்.
*அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல பெயர்களும், வடிவங்களும் தாங்கி கடவுள் அவ்வப்போது அவதாரம் செய்கிறார். அதில் சிவனின் உணர்விலிருந்து உதித்த ஒரு கதிரே முருகன்.
*வள்ளியும் தெய்வானையும் முருகனின் இரு துணைவியர். அவர்கள் கிரியாசக்தியையும் (செயல்பாட்டையும்), ஞானசக்தியையும் (வாழ்க்கை இன்னது தான் என்று அறியும் அறிவு) குறிக்கின்றனர்.
*அறியாமை தாண்டவமாடும் இந்தக் கலியுகத்தில் எளிதில் நெருங்கவல்லவராக இருப்பவர் கந்தன். வீர அனுமானிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டவர் அல்ல இவர்.
*முருகன் மீது சிறிதளவு பக்தி செலுத்தினால் கூட, செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியைத் தருவதோடு வாழ்வில் செல்வவளமும், ஆன்மிக சுபிட்சமும் வழங்குகிறார்.
*தமிழ்க்கடவுளாகப் போற்றப்படுபவர் முருகன். குகன், கந்தன், குமரேசன், கார்த்திகேயன், சண்முகன், சுப்பிரமணியன், வேலாயுதன் என்பதெல்லாம் அவருக்குரிய பெயர்கள்.
*முருகனுக்கு சரவணபவன் என்றும்பெயருண்டு. நாணல் காட்டில் உதித்தவர் என்பது பொருள். இவரே தேவர்களின் தலைவனாகவும், தாரகாசுர சம்ஹாரனாகவும் விளங்கினார்.
*முருகனின் திருவடியில் இருக்கும் பாம்பு, முருகன் அச்சமில்லாதவர், அழியாத ஞானம் கொண்டவர் என்பதன் குறியீடாகும்.
*ஞானம், வைராக்கியம், பலம், புகழ்,செல்வம், தெய்வீக சக்தி ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் என்பதால் முருகன் ஆறு முகங்களோடு காட்சியளிக்கிறார்.
*இலங்கையிலுள்ள கதிர் காமத்தில், பக்தியுடன் விரதம் மேற்கொள்பவருக்கு முருகனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும்.
*பழநியில் முருகனை தரிசித்தால் தீராத நோய் கூட தீர்ந்து போகும். நட்சத்திரத்தில் கார்த்திகையும், திதியில் வளர்பிறை சஷ்டியும் முருக விரதத்திற்கு உகந்தவை.
*நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையைப் பக்தியுடன் படிப்போருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள், காவடிச்சிந்து, கந்த சஷ்டிக்கவசம் ஆகிய பாடல்கள் தினமும் பாடுவதற்கு ஏற்றவை.
*முருகபக்தர்கள் விசேஷமாகச் செய்யும் வழிபாடு காவடி. தோளில் ஒரு கம்பைக் கிடத்தி, அதன் இருமுனைகளிலும் கூடைகளைத் தொங்கவிட்டிருப்பர். பூக்களாலும், மயிற்பீலிகளாலும் அதை அலங்காரம் செய்வர்.
*பங்குனி உத்திரநாளில் முருகமந்திரமான ஓம் சரவணபவாய நம என்ற மந்திரத்தை ஜெபித்து, கந்தனே கதி என அவனுக்கு நம்மைச் சொந்தமாக்கி விட்டால், கருணைக்கடலான அவன் அருளால் எல்லா நன்மைகளும் பெருகும்.
-சிவானந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar