கேசவன் யார் என கேட்டால் விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று என்று சொல்வோம். கேசி என்ற அரக்கனைக் கொன்றதால் கிருஷ்ணனுக்கு கேசவன் என பெயர். ஆனால், இதற்கு இப்படியும் ஒரு பொருள் சொல்வர். க, அ, ஈச, வ ஆகிய நான்கு எழுத்தும் சேர்ந்ததே கேசவ என்றாகிறது. அதில் க பிரம்மாவையும், அ விஷ்ணுவையும், ஈச சிவனையும் குறிக்கும். இவர்களே மும்மூர்த்திகள். வ என்பதற்கு தன் வசத்தில் வைத்திருப்பவர் என பொருள். மும்மூர்த்திகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேலான பரம்பொருளை கேசவ என்பர்.