விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை ரூ.5 லட்சத்தில் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2013 11:04
விழுப்புரம்: சித்திரை திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் உள்ள 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வர்ணம் தீட்டும் பணிகள் நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில்ஆண்டுதோறும் சித்திர திருவிழாவையொட்டி அய்யனார் குளக்கரையில் அமைந்துள்ள 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. அதேபோல் இந்தாண்டும் வரும் 14ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி வரும் 13ம் தேதி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி சித்திரை திருவிழா மற்றும் முதல்வரின் 2 ஆண்டுகள் ஆட்சிப்பணி சிறந்த முறையில் முடிந்துள்ளதை யொட்டியும் தெற்கு அய்யனார் குளக்கரையில் அமைந்தள்ள 90 விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 7ம் ஆண்டு பாலாபிஷேகம் (10 ஆயிரம் லிட்டர் பால் மூலம்) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அ.தி. மு.க., மாவட்ட செயலா ளர் லட்சுமணன், அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருவிழாவை யொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் தீட்டப்பட்டு, தற்போது புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிலை நிறுவனர் தனுசு மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.