பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
11:04
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள, 16 அடி ஆஞ்சநேயருக்கு, 20ம் ஆண்டு பிரதிஷ்டை விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாலித்து வரும், 16 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 20ம் ஆண்டு பிரதிஷ்டை விழா சிறப்பு வழிபாடு நடந்தது. 16 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழாவையொட்டி ஸ்ரீராமர் கோவிலிருந்து, பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள முத்துப்பேட்டை, எடையூர் சங்கந்தி, கட்டிமேடு, பாமணி, கொக்கலாடி, கச்சனம், ஆலச்சம்பாடி உள்பட கிராமப்புறங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை பட்டாச்சாரியார்கள் உப்பிலி, ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராம்குமார், கணக்கர், அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.