ராமாநுஜ நாவலர் சுவாமிகள் சபை சார்பில் பண்ருட்டியில் வைஷ்ணவ மாநாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2013 10:04
பண்ருட்டி:பண்ருட்டியில் ஸ்ரீமத் ஏ.வே.வி.ராமாநுஜ நாவலர் சுவாமிகள் சபை சார்பில் 88ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நடந்தது. மாநாட்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மதியம் நாவலர் பெருமான் திருவுருவ வீதியுலா நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் மங்கள சாசனத்துடன் மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு சித்திரைசாவி தாமோதரன் தலைமை தாங்கினார். காலை 8.30 மணிக்கு கோவிந்தராஜீலு கருட கொடி ஏற்றினார். 9 மணிக்கு திருமால் வணக்கம், ராமாநுஜ நாவலர் சுவாமிகள் சபை தலைவர் கோவிந்தராஜ் ராமாநுஜ தாஸர் வரவேற்றார். சபை செயலர் செந்தாமரைக்கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். காலை 10 மணிக்கு கஸ்தூரிரங்கன் பட்டாச்சாரியாரின் "பேரருளாளன் பிரபாவம் என்கிற தலைப்பிலும், திருச்சித்திரகூடம் ரங்காச்சாரியார் சுவாமிகள் "நம்மாழ்வாரும், திருத்துழாயும் என்கிற தலைப்பிலும், ஆழ்வார்திருநகரி டாக்டர் பரகால ராமாநுஜர் "பாகவதர்களின் பெருமை என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றினர். பகல் 1 மணிக்கு ரவி குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி, கடலூர் லட்சுமணராமாநுஜர் நஞ்ஜீயர், மதுரை அழகர்கோவில் முகுந்தாச்சாரியார் பேசினர். கள்ளக்குறிச்சி ஆராவமுதனார் சீர்பாடல்கள் பாடினார். கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.