சென்னை:"தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கஜ வரதராஜ பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.பழைய வண்ணாரப்பேட்டை, நல்லப்ப வாத்தியார் தெருவில், பழமை வாய்ந்த, பாழடைந்த நிலையில் உள்ள கஜ வரதராஜ பெருமாள் கோவில் குறித்த செய்தி, "தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது.இதை அடுத்து, கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்து உள்ளது.முதற்கட்டமாக ஸ்தபதி மூலம் கோவில் வரைபடம் வரையப்பட்டு, கருவறை தவிர்த்து, மற்ற கட்டடங்களை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டுவது அல்லது இப்போதுள்ள நிலையிலேயே, கோவிலை சீரமைப்பு செய்வது ஆகிய இரண்டு கட்டங்களில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.