பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
குன்றத்தூர்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, குன்றத்தூர் முருகன் கோவிலில், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, குன்றத்தூர் மலை மீது அமைந்துள்ள, முருகன் கோவி லில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெறும். நடை சாத்தல் இல்லாமல், தொடர்ந்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.காலையும், மாலையும் பஜனை கோஷ்டிகள் மூலம் படி பூஜை நடத்தப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், குளியலறை, கழிப்பறை, குடிநீர், சிறப்பு தரிசனம், போலீஸ் பாதுகாப்பு, கூடுதல் பேருந்து வசதி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.